அம்மன் ஆலயம்
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்
Sri vana duraga parameshwari temple
📍 கதிரமங்கலம்🕉️ மூலவர்: -🙏 தாயார்/அம்மன்: வனதுர்கா பரமேஸ்வரி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை
தல சிறப்புகள்
பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல அம்மன் வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காணமுடியாத தனி சிறப்பு. இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு.
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூவருக்கும், முப்பத்து முக்கோடி தேவருக்கும் முடிவற்ற துன்பங்களை தந்து கொண்டே இருந்தனர் அசுரர்கள். ஈரேழு உலகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் மும்மூர்த்திகளும், தேவர்களும் ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். அந்த யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, அஞ்சற்க விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் இவர்களின் கதை முடியும் எனக்கூறி மறைந்தாள். சொல்லியபடியே அன்னை பராசக்தி பூவுலகில் பர்வதச் சாரலில் இளம்பெண்ணாக சஞ்சரிக்கிறாள். அம்பிகை, தேவாதி தேவர்களின் அம்சத்தையும், தன் அம்சத்தையும் இணைத்து துர்க்கையாக தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களை காக்கிறாள். தேவர்கள் அனைவரும் அன்னையைப்"
+"நமஸ்தே! சரண்யே சிவே ஸானுகம்பே!"
+"நமஸ்தே! ஜகத்வியா பிகே விச்வரூபே!"
+"நமஸ்தே! ஜகத்வந்த்ய பாதார விந்தே!"
+"நமஸ்தே! ஜகத்தாரி ணித்ராஹி துர்க்கே.......!"
+"போற்றிப் புகழ்ந்தனர். அமரர்களின் குறையைத் தீர்த்த பின்னர் அவள் ஏகாந்தியாக சிவமல்லிகா என்ற இத்தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்யத் துவங்கினாள். அந்த தலமே தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம் & வரைபடம்
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
-
தாயார்/அம்மன்
வனதுர்கா பரமேஸ்வரி
தல விருட்சம் (மரம்)
தாமரை
தீர்த்தம் (புனித நீர்)
சிவாகமம்
காலம்
1000 - 2000 வருடங்கள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் கதிரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு வான துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் -. தாயார்/அம்மன் சன்னதி: வனதுர்கா பரமேஸ்வரி.