Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
அம்மன் ஆலயம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

Sri Abirami Sundarswar Temple

📍 கொரநாட்டு கருப்பூர்🕉️ மூலவர்: சுந்தரேஸ்வரர்🙏 தாயார்/அம்மன்: அபிராமி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

காளியின் இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே தரிசிக்க முடிவது சிறப்பு.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

ஒருசமயம் ஊர்மக்கள் அனைவரும் காவிரிக்கரையில் கூடியிருந்தனர். காவிரி வெள்ளத்தில் ஒரு பெட்டி அசைந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பெட்டியை எடுத்துப் பார்க்கும் போது காளியின் மரச்சிலை அதில் இருந்தது. முழு உருவமாக அல்லாமல் மார்பளவு மட்டுமே உள்ள அந்த சிலையை என்ன செய்வதென்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு சிறுமி ஞானம் வந்தது போல் அந்தக் காளியின் சிறப்புகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். விக்கிரமாதித்த மன்னன் ஆராதித்து வந்த மாகாளிதான் இவள். அந்த மன்னனே இந்தச் சிலையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆற்றில் விட்டிருக்கிறான். பல ஆண்டுகள் எங்கெங்கெல்லாமோ ஆற்று வெள்ளச்சூழலில் சுற்றி, கடைசியில் இந்தக் காவிரிக்கரைக்கு வந்துள்ளது என்றாள்,மேலும் அந்தக் காளியை எப்படி பூஜிக்க வேண்டும் என்ற விவரங்களையும் தெரிவித்தாள். அதன்படி ஊரின் தெற்குப் பகுதியில் ஓர் ஓலைக்கொட்டகை அமைத்து, அந்தக் காளியை மரப்பெட்டியுடன் எழுந்தருளச் செய்து வழிபடத் தொடங்கினார்கள். வெள்ளிதோறும் அன்னப் பிரசாதங்களைப் பள்ளயம் போட்ட பின், பெட்டியைத் திறந்து அம்பிகையை ஆராதிக்கத் தொடங்கினர். ஒரு நாள் நள்ளிரவில், திடீரென ஓலைக்கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. ஊர்மக்கள் எப்படியோ போராடி காளி இருந்த பெட்டியைக் காப்பாற்றி விட்டனர். அப்போது பட்டத்திலிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதியை அணுகினர். அம்பிகை சிலையை சிவன் கோயிலில்தான் வைத்து வழிபட வேண்டும். உங்கள் ஊரிலுள்ள சுந்தரேசுவரர் கோயிலில் மாகாளிக்குத் தனி இடம் உள்ளது. போய்ப் பாருங்கள். அங்கேயே பெட்டியோடு அவளை பிரதிஷ்டை செய்து, சுந்தர மாகாளி என்ற பெயரில் ஆராதியுங்கள். சுபிட்சம் உண்டாகும். பழைய பள்ளய பூஜை முறையை மாற்ற வேண்டாம் என பீடாதிபதி ஆசியருளினார். அன்று திருப்பாடலவனம் என அழைக்கப்பட்ட ஊர்தான், காளியின் ஊர் காளியூராகி, கருப்பூராகி, பாதி உருவக் காளியானதால் கொரநாட்டு கருப்பூர் என்று இன்று அழைக்கப்படுகிறது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

சுந்தரேஸ்வரர்

தாயார்/அம்மன்

அபிராமி

தல விருட்சம் (மரம்)

பாதிரி மரம்

தீர்த்தம் (புனித நீர்)

பிரம்ம தீர்த்தம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கொரநாட்டு கருப்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் சுந்தரேஸ்வரர். தாயார்/அம்மன் சன்னதி: அபிராமி.