Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
நவக்கிரகத் தலம்

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில்

Sri Vaitheeswaran Temple

📍 வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்🕉️ மூலவர்: வைத்தியநாதர்🙏 தாயார்/அம்மன்: தையல்நாயகி🏛️ காலம்: 2000 ஆண்டுகளுக்கு பழமை

தல சிறப்புகள்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு (vaitheeswaran koil) புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. புள் என்ற சடாயு பறவை ராஜனும், இருக்கு என்ற வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது. கோவிலின் பெயர் சித்தாமிர்தம் குளம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த குள கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயன்றது, அப்போது அவற்றை சதானந்த முனிவர் சபித்தார். அதன் காரணமாக இன்று வரை இந்த குளத்தில் பாம்பு, தவளை போன்றவை காணப்படுவது இல்லையாம். இந்த கோவிலின் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளது. மற்ற கோவில்களில் நவகிரகங்கள் ஓரு குறிப்பிட்ட அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் இந்த இத்தலத்தில் நவகிரங்கள் அனைத்தும் மூலவரான சிவபெருமான் பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். வைத்தீஸ்வரன் கோவில் அமைப்பு: இந்த கோவிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரப்பத்திரியர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. ஐந்து பிரகாரங்கள் கொண்ட இந்த கோவில், ஏழு நிலை ராஜ கோபுரங்கள் கொண்டது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

வைத்தீஸ்வரன் கோவில்: நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.

விழாக்களும் உற்சவங்களும்

கோயில் பெருவிழா

Annual

காலம்: Various

Kanda Sashti festival, which falls on Tuesday, is celebrated with fervor. On this day, Angaraka bestows his blessings to devotees who participate in the procession in a vehicle. Special festivals for Lord Murugan, such as Tiruvizha and Panguni Uthiram, are celebrated in the month of Thai. During Panguni Uthiram, there is a grand procession involving the running of chariots and palanquins. During Panguni Uthiram, there is a significant event called 'Nay Oottam' or 'Nari Oottam' where numerous devotees participate. This event is known for its special ritual of elephant racing, symbolizing the joy of witnessing Lord Murugan as a child. It is a special occasion where devotees gather to celebrate the removal of doshas (afflictions) at the Vaitheeswaran Temple, known as the abode of Lord Angaraka. It is believed that those afflicted with Mars doshas can overcome obstacles related to marriage if they visit this temple, which instills faith among the devotees.

பிரார்த்தனை & வேண்டுதல்

தீராத நோய்களுக்கு :</h3><p>செவ்வாயின் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். முத்துக்குமரன் சன்னதியில் படைக்கப்படும் சந்தனம், அனைத்து நோய்களையும் குணமாக்கும் என்பது ஐதீகம். வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம்: செவ்வாய் கிழமையின் போது அதிகாலை இந்த ஸ்தலத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி, பின்பு உடுத்திய உடையை அங்கேயே விட்டுவிட்டு, புதிய உடையை உடுத்தி கொண்டு, இங்கு இருக்கும் விநாயகர், செவ்வாய், சிவன், அம்பாள் என்று அனைத்து தெய்வத்தையும் வழிப்பட்டு வர அனைத்து தோஷங்களும் நீங்கும். மூலஸ்தலமான அங்காரகன் பிரகாரத்திற்கு சென்று பால் அபிஷேகம், பஞ்சாமிருத அபிஷேகம், திருநீர் அபிஷேகம் மற்றும் அங்காரகனுக்கு பிடித்த துவரை சாதம் செய்து நெய்வேத்தியம் செய்து, யாருக்கு தோஷம் உள்ளதோ அவர்கள் கைகளால் பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை அளிக்க செவ்வாய் தோஷம் நீங்கும். வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோஷியம்:அதே போல் பாரம்பரிய நாடி ஜோஷியத்திற்கு பெயர் பெற்றது இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவில். அகத்தியர் அருளிய நாடி ஜோஷியத்தை நம்பி இந்த கோவிலுக்கு வந்து, பக்தர்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.மேலும் இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் வசீகரிக்க கூடிய சக்தி இந்த ஆலயத்திற்கு உள்ளதாம். நாடி ஜோஷியம் பார்த்து பலன் பெற்றவர்களும் உள்ளனராம்.

அமைவிடம் & வரைபடம்

திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக சென்றடையலாம். சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுசேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.

கூகுள் மேப்பில் வழி காண்க →

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

வைத்தியநாதர்

தாயார்/அம்மன்

தையல்நாயகி

தல விருட்சம் (மரம்)

வேம்பு

தீர்த்தம் (புனித நீர்)

சித்தாமிர்தம்

காலம்

2000 ஆண்டுகளுக்கு பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில்

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் எங்கு அமைந்துள்ளது?+
திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக சென்றடையலாம். சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுசேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.
அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் வைத்தியநாதர். தாயார்/அம்மன் சன்னதி: தையல்நாயகி.