Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
திருமால் ஆலயம் (வைணவத்தலம்)

அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில்

Sri Thirunaraiyur Nambi Temple

📍 நாச்சியர்கோவில் (சுகந்தகிரி க்ஷேத்ரம்)🕉️ மூலவர்: திருநறையூர் நம்பி🙏 தாயார்/அம்மன்: வஞ்சுளவல்லி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

14 வது திவ்யதேசம்

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோவில் என்ற பெயரும் பெற்றது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

திருநறையூர் நம்பி

தாயார்/அம்மன்

வஞ்சுளவல்லி

தல விருட்சம் (மரம்)

வகுளம் (மகிழம்)

தீர்த்தம் (புனித நீர்)

மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில்

அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் நாச்சியர்கோவில் (சுகந்தகிரி க்ஷேத்ரம்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருநாரையூர் நம்பி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் திருநறையூர் நம்பி. தாயார்/அம்மன் சன்னதி: வஞ்சுளவல்லி.