Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
திருமால் ஆலயம் (வைணவத்தலம்)

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்

Sri Chakrapani Swami Temple

📍 கும்பகோணம்🕉️ மூலவர்: சக்கரபாணி🙏 தாயார்/அம்மன்: விஜயவல்லி தாயார்🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் அருள்மிகுசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது. சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார். சூரிய னுக்கு ஒளி கிடைத்தது. இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோவில் கட்டினான் சூரியன்.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

சக்கரபாணி

தாயார்/அம்மன்

விஜயவல்லி தாயார்

தல விருட்சம் (மரம்)

-

தீர்த்தம் (புனித நீர்)

மகாமக குளம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் சக்கரபாணி. தாயார்/அம்மன் சன்னதி: விஜயவல்லி தாயார்.