திருமால் ஆலயம் (வைணவத்தலம்)
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்
Sri Kola Villi Ramar Temple
📍 திருவெள்ளியங்குடி (பார்கவ க்ஷேத்திரம்)🕉️ மூலவர்: கோலவில்லி ராமர், சிருங்கார சுந்தரர்🙏 தாயார்/அம்மன்: மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை
தல சிறப்புகள்
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன்.ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடி என அழைக்கப்படுகிறது.சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோவில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோவில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது 'வெள்ளியங்குடி' ஆயிற்று.
அமைவிடம் & வரைபடம்
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
கோலவில்லி ராமர், சிருங்கார சுந்தரர்
தாயார்/அம்மன்
மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)
தல விருட்சம் (மரம்)
செவ்வாழை
தீர்த்தம் (புனித நீர்)
சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
காலம்
1000 - 2000 வருடங்கள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடி (பார்கவ க்ஷேத்திரம்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் கோலவில்லி ராமர், சிருங்கார சுந்தரர். தாயார்/அம்மன் சன்னதி: மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி).