Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
நவக்கிரகத் தலம்சந்திரன் (திங்கள்) தலம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

Sri Kailasanathar Temple [Chandran Temple]

📍 திங்களூர்🕉️ மூலவர்: கைலாசநாதர்🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் முருகன், கந்தன், கார்த்திகேயன் என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளையவனுக்கு இளைய திருநாவுக்கரசு என்று. தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார்." +"மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

கிரகத்தின் சிறப்பு பலன்கள் — சந்திரன் (திங்கள்)

கிரகம்

சந்திரன் (திங்கள்)

Moon (Chandra)

அதிபதி

Lord Chandra

பரிகாரம் & வழிபாட்டு பலன்கள்

Mind, emotions, and mental peace. Worship here for emotional well-being and mother's blessings.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

கைலாசநாதர்

தல விருட்சம் (மரம்)

வில்வமரம்

தீர்த்தம் (புனித நீர்)

சந்திரபுஷ்கரிணி

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திங்களூர் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் கைலாசநாதர்.