திருமால் ஆலயம் (வைணவத்தலம்)
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில்
Oppiliappan Temple
📍 திருநாகேஸ்வரம் (திருவிண்ணகரம்)🕉️ மூலவர்: ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)🙏 தாயார்/அம்மன்: பூமாதேவி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோவில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
அமைவிடம் & வரைபடம்
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)
தாயார்/அம்மன்
பூமாதேவி
தல விருட்சம் (மரம்)
-
தீர்த்தம் (புனித நீர்)
அஹோத்ரபுஷ்கரணி
காலம்
1000 - 2000 வருடங்கள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில்
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம் (திருவிண்ணகரம்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஓப்பிலியப்பன் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்). தாயார்/அம்மன் சன்னதி: பூமாதேவி.