Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)

அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில்

Vilvaneshwarar Temple

📍 திருவைகாவூர் (வில்வவனம்)🕉️ மூலவர்: வில்வவனேசுவரர்🙏 தாயார்/அம்மன்: வளைக்கைநாயகி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத துவாரபாலக நிலையில் காட்சி தருகிறார்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான்.நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

வில்வவனேசுவரர்

தாயார்/அம்மன்

வளைக்கைநாயகி

தல விருட்சம் (மரம்)

வில்வமரம்

தீர்த்தம் (புனித நீர்)

எமதீர்த்தம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் திருவைகாவூர் (வில்வவனம்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் வில்வவனேசுவரர். தாயார்/அம்மன் சன்னதி: வளைக்கைநாயகி.