Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

Sri Swarnapureeshwarar Temple

📍 கடுவரைக்கபுத்துர் (திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்)🕉️ மூலவர்: சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்🙏 தாயார்/அம்மன்: சொர்ணாம்பிகை, சிவசேகரி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோவில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோவில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்." +"சிவன் இவரது கனவில் தோன்றி, நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,''என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்." +"மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார்." +"ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்." +"மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு மந்திரியாரே! இந்த கோவில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு, என்றார். அதற்கு மந்திரி, மன்னா!என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,''என்றார். இதனால் கோபமடைந்த ராஜா, என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோவில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,'' என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது." +"வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் ஆண்டவனே என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார்." +"அப்போது இறைவன் தோன்றி ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்'' என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் ஆண்டவன் கோவில் எனப்பட்டது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்

தாயார்/அம்மன்

சொர்ணாம்பிகை, சிவசேகரி

தல விருட்சம் (மரம்)

வன்னி

தீர்த்தம் (புனித நீர்)

திரிசூலகங்கை

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடுவரைக்கபுத்துர் (திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர். தாயார்/அம்மன் சன்னதி: சொர்ணாம்பிகை, சிவசேகரி.