சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில்
Sri Ezhuthari Nathar Temple
📍 இன்னம்பூர் (திருஇன்னம்பூர், திருவின்னம்பர்)🕉️ மூலவர்: எழுத்தறிநாதர்🙏 தாயார்/அம்மன்: நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை
தல சிறப்புகள்
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகின்றனர்.
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன்,சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அட்சரம் என்றால் எழுத்து. இது சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றீயீசர் என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் ஆக இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு இனன் என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று பெயர் ஏற்பட்டு இன்னம்பூர் என்று மாறிவிட்டது.
அமைவிடம் & வரைபடம்
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
எழுத்தறிநாதர்
தாயார்/அம்மன்
நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்
தல விருட்சம் (மரம்)
செண்பகமரம்
தீர்த்தம் (புனித நீர்)
ஐராவத தீர்த்தம்
காலம்
1000 - 2000 வருடங்கள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில்
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் இன்னம்பூர் (திருஇன்னம்பூர், திருவின்னம்பர்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு எழுத்தறி நாதர் திருக்கோவில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் எழுத்தறிநாதர். தாயார்/அம்மன் சன்னதி: நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்.