Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)

அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில்

Sri Akshayanatha Swamy Temple

📍 திருமாந்துறை, கும்பகோணம்🕉️ மூலவர்: அட்சயநாதசுவாமி🙏 தாயார்/அம்மன்: யோகநாயகி அம்பாள்🏛️ காலம்: சுமார் 1200 ஆண்டுகள் பழமை

தல சிறப்புகள்

சந்திர கிணறு அதிசயம்: இந்த கோயிலுக்குள் அரை சந்திர அதாவது பிறை வடிவில் சந்திர தீர்த்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வளர்பிறை நாட்களில் தண்ணீர் அதிகரிப்பதும், தேய்பிறை நாட்களில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக குறைவதுமான அதிசயம் பல காலமாக நடைபெற்று வருகின்றது. இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமா முனிவரும், நவகிரகங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாகப் புராணக்கதை தெரிவிக்கின்றது. வளர்பிறையில் பொங்குவதும், தேய்பிறையில் குறைவதும் சாதாரணம். அந்த வகையில் அமாவாசை தினத்தில் கிணற்றில் குறைந்த அளவு நீர் இருப்பது வழக்கம். ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக கடந்த 2018 டிசம்பர் 6ஆம் தேதி அமாவாசை தினத்தில் திடீரென குறைந்த அளவு நீர் காணப்பட வேண்டிய கிணற்றில் நீர் பொங்கி வந்தது. கங்கையே அட்சயநாதரை தரிசிக்க, பொதுவாக நீர் அதிகரிக்கும் நாளில் வராமல், மிக குறைவாக இருக்க வேண்டிய நாளில் பொங்கி வந்து, அன்றைய தினம் கோவில் முழுவதும் நீரால் சூழ்ந்தது.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

கும்பகோணம், திருமாந்துறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீ அக்ஷய நாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செம்பியன்மாதேவியரால் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு இந்த கோவில் சொந்தமானது. முன்னொரு காலத்தில் காலமா முனிவருக்கும், நவகிரகங்களுக்கும் தொழு நோய் ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய சிவபெருமானை வேண்டினார். அவர் கூறிய அறிவுரைப்படிதிருமாந்துறை வெள்ளெறுக்குக் காட்டில் பூஜைசெய்து, இந்த கோயிலில் அமைந்துள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் 15 தினங்கள் நீராடி, தங்கள் உடல் ரோகத்திலிருந்து விடுபட்டு, மனக்குறையை தீர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக இந்த கோவில் ரோகிணி நட்சத்திரத்தினருக்கு உரிய கோயிலாக பார்க்கப்படுகின்றது.

விழாக்களும் உற்சவங்களும்

கோயில் பெருவிழா

Annual

காலம்: Various

Vaikasi Visakha Festival

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

அட்சயநாதசுவாமி

தாயார்/அம்மன்

யோகநாயகி அம்பாள்

காலம்

சுமார் 1200 ஆண்டுகள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில்

அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் திருமாந்துறை, கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு அட்சயநாத சாமி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் அட்சயநாதசுவாமி. தாயார்/அம்மன் சன்னதி: யோகநாயகி அம்பாள்.