சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
Sri Agastheeswarar (Karuvalarcheri) Temple
📍 கருவளர்ச்சேரி🕉️ மூலவர்: அகஸ்தீஸ்வரர்🙏 தாயார்/அம்மன்: அகிலாண்டேஸ்வரி, கருவளர்நாயகி🏛️ காலம்: ஆயிரம் ஆண்டுகள் பழமை
தல சிறப்புகள்
இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், வளையல் ஆகியவற்றை வேண்டுதல் பொருளாக சமர்ப்பிப்பதையும் காணமுடிகிறது.
இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது.
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபமுத்திரையும் பூஜித்ததால் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்று திருநாமம். இங்கு, அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்ததாகக் கூறுவர். லோபமுத்திரை சமேத அகத்திய முனிவருக்கும் இங்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பௌர்ணமி மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் இவர்களுக்கும் விசேஷ வழிபாடுகள் உண்டு.
அம்பிகையும் ஈசனும் ஒரே வரிசையில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. அரியையும், சிவனையும் வழிபட விரும்பிய அகத்தியருக்காக இருவரும் இப்படி அருகருகே கோவில் கொண்டதாக ஐதீகம்.
அகத்திய பெருமானின் கிரந்த நாடியில்
" குருவளர்சேரி என்று குறிப்பிடப் படுகிறது.புண்ணிய தலமான இது குரு பக்தியை வளர்க்கும் தலம் என கூறப் பட்டுள்ளது.குரு பக்தி மென்மேலும் பெருக வணங்க வேண்டிய தலம். அகத்திய பெருமானின் குரு பாதுகா சக்தியின் மூலம் ஆணவம் அழிந்து அருட்கடாட்சம் கிட்டும் தலம்." என்று இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரசுவாமி திருக்கோவில் வரலாறு லோக மாதாவாம் அம்பிகை 'கரு' காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, 'கருவளர்நாயகி' என்றும் ஒரு பெயர் உண்டு.
அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்ததாகக் கூறுவர். லோபமுத்திரை சமேத அகத்திய முனிவருக்கும் இங்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பௌர்ணமி மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் இவர்களுக்கும் விசேஷ வழிபாடுகள் உண்டு.
அம்பிகையும் ஈசனும் ஒரே வரிசையில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. அரியையும், சிவனையும் வழிபட விரும்பிய அகத்தியருக்காக இருவரும் இப்படி அருகருகே கோவில் கொண்டதாக ஐதீகம்.
அகத்திய பெருமானின் கிரந்த நாடியில்" குருவளர்சேரி என்று குறிப்பிடப் படுகிறது.புண்ணிய தலமான இது குரு பக்தியை வளர்க்கும் தலம் என கூறப் பட்டுள்ளது.குரு பக்தி மென்மேலும் பெருக வணங்க வேண்டிய தலம். அகத்திய பெருமானின் குரு பாதுகா சக்தியின் மூலம் ஆணவம் அழிந்து அருட்கடாட்சம் கிட்டும் தலம். என்று இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
அமைவிடம் & வரைபடம்
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
அகஸ்தீஸ்வரர்
தாயார்/அம்மன்
அகிலாண்டேஸ்வரி, கருவளர்நாயகி
காலம்
ஆயிரம் ஆண்டுகள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் அகஸ்தீஸ்வரர். தாயார்/அம்மன் சன்னதி: அகிலாண்டேஸ்வரி, கருவளர்நாயகி.