Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
பிரம்மா ஆலயம்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில்

Shri Brahma Temple

📍 கும்பகோணம்🕉️ மூலவர்: பிரம்மன்🙏 தாயார்/அம்மன்: சரஸ்வதி, காயத்ரி🏛️ காலம்: 500 வருடங்களுக்குள்

தல சிறப்புகள்

பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது, சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார்.பூதத்தை பார்த்து பயந்த பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத் துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். அதற்கு விஷ்ணு,உனது கர்வத்தை அடக்குவதற்காகவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் மறந்து போகும்,'' என்று சாபமிட்டார். வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு,பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும்,'' என்றார். பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணம் வந்து தவம் செய்தார். யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சேவை செய்தனர். அப்போது யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை மீண்டும் சொல்லித்தந்து வேத நாராயணன் என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லி எனப்பட்டாள்.யாகம் முடிந்தவுடன் இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம் செய்வதற்காக விஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ஒரு நதியை உருவாக்கினார். இந்த நதி ஹரி சொல்லாறு என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி அரசலாறு எனப்பட்டது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

பிரம்மன்

தாயார்/அம்மன்

சரஸ்வதி, காயத்ரி

காலம்

500 வருடங்களுக்குள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு பிரம்மன் திருக்கோயில்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு பிரம்மன் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் பிரம்மன். தாயார்/அம்மன் சன்னதி: சரஸ்வதி, காயத்ரி.