Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

Shri Airavatesvara Temple

📍 தாராசுரம்🕉️ மூலவர்: ஐராவதேஸ்வரர்🙏 தாயார்/அம்மன்: வேத நாயகி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

சிற்பங்கள் நிறைந்த கோவில், இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியாக நடந்து கொண்டது, துர்வாச மாமுனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர் அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக அலைய வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேசுவரர் என்றே போற்றப்படலானார் என்கிறது புராணம். இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு சமயம் யமன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

ஐராவதேஸ்வரர்

தாயார்/அம்மன்

வேத நாயகி

தல விருட்சம் (மரம்)

வில்வ மரம்

தீர்த்தம் (புனித நீர்)

-

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் தாராசுரம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் ஐராவதேஸ்வரர். தாயார்/அம்மன் சன்னதி: வேத நாயகி.