சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில்
Peruvudaiyar Temple
📍 கங்கைகொண்ட சோழபுரம்🕉️ மூலவர்: பிரகதீஸ்வரர்🙏 தாயார்/அம்மன்: பெரியநாயகி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை
தல சிறப்புகள்
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.
தரிசன நேரங்கள்
🌅
காலை தரிசனம்
6:00 AM to 12:00 PM
☀️
மதிய நடை சாத்துதல்
12:00 PM to 4:00 PM
நடை சாத்தப்பட்டிருக்கும்
🌙
மாலை தரிசனம்
4:00 PM to 8:30 PM
* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.
தல வரலாறு மற்றும் புராணக் கதை
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது."
+"தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் ஆனது."
+"கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்."
+"இக்கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
அமைவிடம் & வரைபடம்
கூகுள் மேப்பில் வழி காண்க →📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.
🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.
தல விவரக்குறிப்புகள்
மூலவர்
பிரகதீஸ்வரர்
தாயார்/அம்மன்
பெரியநாயகி
தல விருட்சம் (மரம்)
பின்னை, வன்னி
தீர்த்தம் (புனித நீர்)
சிம்மக்கிணறு
காலம்
1000 - 2000 வருடங்கள் பழமை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில்
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் பிரகதீஸ்வரர். தாயார்/அம்மன் சன்னதி: பெரியநாயகி.